தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா தேர்தலை முன்னிட்டு குமரி, தேனி மற்றும் கோவை ஆகிய எல்லை மாவட்டங்களிலும் கர்நாடகா தேர்தலை முன்னிட்டு நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய எல்லை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.