
அதிமுக கூட்டணியில் தேமுதிக-5, எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதத்திற்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, அக்கட்சி சார்பில் இன்று அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.