
மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் நிலையில் பாஜக பக்கம் சாய்ந்த ஓபிஎஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா? பாஜகவுக்கு ஆதரவு தரலாமா வேண்டாமா? என்பது குறித்து ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.