511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பேசிய அண்ணாமலை, நான் நல்லவன் இல்லை, அரசியலில் நல்லவனுக்கு வேலை இல்லை, இது பழைய பாஜக இல்லை, வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி, மோடியை மீண்டும் பிரதமராக வேண்டும் என்று அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.