மனித உடலுக்கு சக்தி மிகவும் அவசியம். சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து விடும். உடல் வலுவிழந்தால் தானாக நோய் பாதிப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளும். மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது.

மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. முக்கியத்துவம் வாய்ந்த உயிர் காக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலர் குளிர் காலத்திலும் சரி கோடை காலத்திலும் சரி குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவார்கள். ஆனால் இவ்வாறு குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

  • குளிர்ந்த நீரை குடிப்பதால் சளி தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • குளிர்ந்த நீரை குடிப்பதால் சுவாச மண்டலத்தில் சளி உருவாகும். இதன் காரணமாக பல சுவாச தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் இருக்கும் கொழுப்புகளை குறைக்க முடியாது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்ந்த நீரை குடிப்பதால் ரத்த நாளங்கள் சுருங்கி செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
  • குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடித்தால் நரம்புகள் தூண்டப்பட்டு இதயத்துடிப்பு குறையும் அபாயம் இருக்கிறது. இது சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது.
  • குளிர்ந்த நீர் குடிப்பதால் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும் உடலின் திறன் குறையு‌ம்.
  • ரத்த வெள்ள அணுக்களின் எண்ணிக்கையையும் குளிர்ந்த நீர் குறைக்கும்.

ஆகவே குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்தை சீராக வைத்திருப்போம்.