பொதுவாக பெண்கள் தங்களுடைய சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துகிறார்கள். ரோஸ் வாட்டர் உடலுக்கு இயற்கையான ஒரு டோனராக பயன்படுத்தப்படுகிறது. இது ரோஜா இதழ்களில் இருந்து செய்யப்படும் ஒரு திரவம். நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள்,  மாசுக்கள், எண்ணெய் பிசுக்கள் போன்றவற்றை அடியோடு இல்லாமல் பண்ணுகிறது. இவ்வாறு பல நன்மைகளை கொடுக்கக்கூடிய ரோஸ் வாட்டர் சில பொருட்களோடு மட்டும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. அதனால் சருமத்தில் பல பிரச்சனைகளை அது கொண்டு வரும். அவ்வாறு பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணைகளோடு பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தும் போது சருமத்தில் அலர்ஜி ஏற்படுத்தும். ஆஸ்துமா டெர்மாடிடிஸ் போன்ற நோய் இருப்பவர்களுக்கு பிரச்சனையாகிவிடும். விட்ச் ஹேசல் எனும் இயற்கை அஸ்ட்ரின்ஜன்டாக பயன்படத்தப்டுகின்றது. இதை ரோஸ் வாட்டருடன் பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் வறட்சி உண்டாகும்.

பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் உள்ளதால் இதனை ரோஸ் வாட்டருடன் கலந்து பயன்படுத்தினால் அது முகத்தில் முகப்பருவை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் சருமத்தின் பீச் அளவை குறைக்கிறது. இதனால் சருமம் அதன் உணர்திரனை இழக்கும். எலுமிச்சை சாறில் வைட்டமின் சி உள்ளதால் இது முகப்பருவுக்கு எதிராக செய்ற்படுகிறது. ஆனால் இதை ரோஸ் வாட்டருடன் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள பி எச்அளவை முற்றாக இல்லாமல் ஆக்கிவிடும்.