பணத்தை வீட்டில் வைத்து பூட்டி வைக்காமல் வங்கியில் சேமித்து வைப்பது சிறந்த அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வங்கிகள் திவால் ஆகிவிட்டால் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தின் நிலைமை என்ன ஆகும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

அதற்கான பதில் இதோ. வங்கி திவால் ஆகும் பட்சத்தில் டெபாசிட் செய்துள்ள பணம் அனைத்தும் 1961 ஆம் ஆண்டு டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் ஆக்ட் படி வாடிக்கையாளருக்கு திரும்ப கிடைத்துவிடும். ஆனால் 5 லட்சத்திற்கு மேல் உள்ள டெபாசிட் தொகையை காப்பீடு சந்திக்காது.

எந்த காரணத்தினால் வங்கி சிக்கல்களை சந்தித்தாலும் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் 5 லட்சம் வரை திருப்பி தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு தெரிவிக்கிறது. இதனால் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை வெவ்வேறு கணக்குகளில் சேமித்து வைப்பது நல்லது என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.