ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறையானது(AePS) ஆதார் எண்ணை அங்கீகாரம் செய்து, கட்டணம் / பேமெண்ட் செலுத்தும் ஒரு முறையாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொருவருக்கும் வழங்கும் ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் தான் ஆதார்.  AePS என்பது ஆதார் அங்கீகரிப்பு செய்வதன் மூலமாக பணப் பரிமாற்றம் நடக்கிறது.  கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பேங்க் அல்லது ATM வசதிகள் இல்லை.

அத்தகைய பகுதிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை செயல்படுத்தப்படுகிறது. அதாவது Aadhaar card மூலம் AePS முறையில் பணத்தை எடுக்கலாம். பணம் எடுக்க டெபிட் கார்டு, பாஸ்புக் மற்றும் அக்கவுன்ட் நம்பர் தேவையில்லை. பயனர்கள் ஆதார் நம்பர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இந்த சேவையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.