அரசியலில் குதித்துள்ள விஜய், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என விஜய் கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசினார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கட்சிப் பணிகள் தீவிரமடையும் என்றார். மேலும், குக்கிராமம் வரை தவெக பெயர் தெரிந்திருக்க வேண்டும், 80 வயது முதியவர்கள் கூட கட்சியின் பெயரை அறிந்திருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார்.