
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நிர்வாகிகளை சந்தித்த விஜய், இயக்கத்தை விரைவில் கட்சியாக தொடங்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி நான்காம் தேதி அரசியல் கட்சியாக பதிவு செய்ய விஜய் மக்கள் இயக்கத்தினர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சீமானும் அந்த தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.