அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நாளை முதல் அயோத்தியில் உள்ள பால ராமரை பொதுமக்கள் தரிசிக்கலாம். காலை 7 மணி முதல் பகல் 11:30 மணி வரையும் பின்னர் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசனத்திற்கு அனுமதி உண்டு.
அதேபோன்று காலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் மக்கள் https://srjbtkshetra என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது இந்த வசதி தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதோடு இந்த இணையதளத்தை பயன்படுத்தி கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் தரிசன நேரத்தை நள்ளிரவு வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
