உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கெல்வாடா கிராமத்தில் பட்டாசு கடை ஒன்று வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த 12 வயது சிறுமி ஹிமான்சு மற்றும் 14 வயது சிறுவன் பராசு ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரான ஷதாபிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.