
தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ரேஷன் கடைகளும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி, சர்க்கரை, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு இன்று அலைந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாளை முதல் ரேஷன் கடைகளும் டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.