உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோக சிலிண்டரின் விலை ஏற்றதால் பொதுமக்களுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப அட்டைகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டருக்கும் 300 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதோடு மானியத்துடன் சேர்த்து  பொதுமக்களுக்கு சிலிண்டரின் விலை 603க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி  இணைப்புகள் வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.