இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. பெரும்பான்மையான மக்கள் எஸ்பிஐ வங்கியில் தங்களுடைய கணக்குகளின் மூலமாக பலவிதமான கடன் திட்டங்களின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வங்கி நிதி செலவு அடிப்படையான கடன் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி இருக்கிறது.

இதனால் கடன் வாங்கி உள்ள நபர்கள் தங்களுடைய இஎம்ஐ தொகையில் மாதம் தரும் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. நீண்டகால கடன்களுக்கான MCLR  விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. sbi உயர்த்தியுள்ள கட்டணங்கள் டிசம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் இதன் மூலமாக வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களின் இஎம்ஐ பணம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மற்ற வங்கி நிறுவனங்களும் தங்களுடைய வங்கி கடன்களை உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.