செல்லப்பிராணிகள் எப்பொழுதும் தங்களுடைய எஜமானர்களுக்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் நாய் ஒன்று சிறுவன் ஒருவனை ஆபத்திலிருந்து காக்கிறது. பொதுவாக நாய்கள் பெற்றோர்களை விட வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் செய்யும். இது குறித்து வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக வலம் வருகிறது.

அதே போன்ற காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிறுவர் இருவர்  பந்து விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அது தண்ணீரில் விழுந்துள்ளது. உடனே அதை சிறுவன் ஒருவன் எடுக்க சென்றுள்ளார். இந்த தருணத்தில் பக்கத்தில் படுத்திருந்த நாய் அவன் எடுக்க விடாமல் தடுத்து அதை தானே முயற்சித்து அந்தப் பந்தை எடுத்துக் கொடுத்துள்ளது.