வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரைக்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.