செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்த வரைக்கும் தொடர்ச்சியா நம்ம பாக்குறோம்…  இன்னைக்கு இந்தியால எங்கேயுமே இல்லாத அளவுக்கு Income Tax ரெய்டு மட்டுமில்லை. Income tax ல அவங்க கைப்பற்ற கூடிய பணமா இருக்கலாம், சொத்துக்களா இருக்கலாம்… தமிழ்நாடுல ரெண்டு விஷயம் நடந்திருக்ககு.  ED  முன்னாள் அமைச்சர் திரு ஆ. ராசா அவர்களுடைய 15க்கும்  மேற்பட்ட  சொத்துக்களை  பறிமுதல் பண்ணி இருக்காங்க, அது ஒரு நியூஸ்.

இன்னொரு பக்கம் ஜெகத்ரட்சகன் அவர்கள் மீது மூன்று நாட்களாக IT சோதனை பண்றாங்க. அதிகாரபூர்வமாக பிரஸ் நோட் ஏதும் கொடுக்கல, நாம் கருத்து சொல்லாத முடியாது. இது என்ன சொல்லுதுனா….  இது எந்த அளவுக்கு தமிழகத்தில் பப்ளிக் மணி என்பது பிரைவேட் மணியாக  மாறி இருக்கிறது என்பது மிகத் தெளிவா தெரியுது. இதற்கு முன்பு கோயம்புத்தூர் பக்கத்துல இ டி ஆ.ராசா அவர்களின் சொத்தை  முடக்குணாங்க. ஒரு கம்பெனிக்கு டீல் கொடுப்பதற்காக லேண்ட் வாங்கிட்டாரு அப்படின்னு பிரஸ் நோட்ல இருந்துச்சு.

அதனால தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த அளவுக்கு மக்கள் வரி பணத்தில் அரசியல்வாதிகள் வாழ்வது புதிதல்ல. இன்னைக்கு ED, IT வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்துல வெளிய வைக்கிறாங்க. இதுதான் நம்ம இன்னைக்கு பேசக்கூடிய ஒரு முக்கியமான விஷயம். எந்த அளவுக்கு தமிழக அரசியல் ஊழலில் புரையோடி போய் இருக்குது. மக்கள் வரிப்பணத்தை ஒரு தனி மனித  வருமானமாக மாற்றுவது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, வருகின்ற காலத்துல இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

இது போல நடவடிக்கை எடுத்தா மட்டும் தான் தமிழ்நாடு அரசியல் களம் மாறும். மத்தபடி இவங்களா ?  அவங்களா? என சொல்வதை விட,  எல்லா இடத்திலும் ED, IT ரெய்டு பண்றாங்க. ஆனால்  தமிழகத்துல என்ன விஷேசம்ண்ணா… தமிழக அரசே அந்த fake யூஆர் கோடு,  இருந்து….  பேக்  EB பில், fake ஜிஎஸ்டி வரியிலிருந்து தமிழக அரசே   முறைகேடு செய்யுது என நாம சொல்லணும். இது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சிறப்பு, தமிழகத்துல…. அரசு அதிகாரிகளே….  அரசு இயந்திரமே ஜிஎஸ்டி வரி எய்ப்பில் ஈடுபட்டு இருக்காங்க.

ஆ. ராஜா ED , IT  ரெய்டு என தொடர்ச்சியா வந்துட்டு இருக்கு. சிலபேர் சொல்லலாம் அரசியல் கால் புணர்ச்சி என்று… இதுல அரசியல் கால்புணர்ச்சி எங்க இருக்கு ? ரெய்டு  பண்றாங்க,  பிரஸ் நோட் கொடுக்குறாங்க.  விஷயத்தை மக்கள் கிட்ட தெளிவுபடுத்துறாங்க…   அதனால தமிழக அரசியல் எந்த அளவுக்கு ஊழலில் எந்த அளவுக்கு புரையோடிய போய் இருக்குது என்பதை தினமும் கூட வெட்ட வெளிச்சமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.