
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு சார்பில் பல நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவச பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதாரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அன்னை யோஜனா குடும்ப அட்டைகளுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. ஒரு சிலர் இலவச அரிசியை வாங்குவது இல்லை. அந்த அரிசி முறைகேடாக வெளிமார்க்கெட்டுக்கு செல்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகின்றது. இதனை தடுக்க குடும்ப அட்டைதாரர்களின் ஆதாரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.