சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது..

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று அகமதாபாத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலகக் கோப்பை தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதுகின்றன. இதையடுத்து நாளை மறுநாள் சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் சென்னை சேப்பாக்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல நாளை மறுநாள் நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் உணவு, குடிநீர் பாட்டில் எடுத்து வர அனுமதி இல்லை.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண செல்லும் முன்னர் 2 கட்ட சோதனைகளுக்கு பின்னரே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிரிக்கெட் போட்டியில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த 300 பேர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்..