காந்தி ஜெயந்தி பொது விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 2 அதாவது நாளை சென்னை புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி அக்டோபர் 2 மட்டும் புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – சூலூர்பேட்டை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, துரித மின்சார ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.