குன்னூர் அருகே நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

குன்னூரை அடுத்த மரப்பாலம் பகுதியில் நேற்று தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து. 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  இதில் மொத்தம் 61 பேர் பயணம் செய்துள்ளனர். பயணம் செய்து அனைவருமே மீட்கப்பட்டுள்ள நிலையில்,

எட்டு பேர் நேற்று இரவு வரைக்கும் உயர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.  அவரது உடல் விபத்து நடந்த பகுதியிலிருந்து தற்போது மீட்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த மரபாலம் பகுதியில் காவல்துறையினர்,  தீயணைப்பு துறையினர் இறந்தவருடைய பெண் சடலத்தை மீட்டு வருகின்றனர்.