மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது அந்த ஆசிரியை அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற நிலையில், கணவர் இறந்த பின் மறுமணம் செய்து ஆசிரியை கருவுற்றுள்ளார்.

இகனையடுத்து பேறுகால விடுப்பு கோரிய ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியை மனுவை அரசு நிராகரித்தது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இரு குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்ற அரசின் கொள்கை முடிவை மீறி, 3வது பிரசவத்துக்கு விடுப்பு கோர முடியாது எனக்கூறி, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.