அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக மறைந்துவிடும் என கருணாநிதியை நினைத்தார். ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு.

கொரோனா  காலத்தில் 13 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது அதிமுக அரசு. கஜா புயலின் போது புயலை விட வேகமாக செயல்பட்டு பாதிப்புகளை சீரமைத்தோம். மதுரை மண் ராசியான மண், மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், 25 ஆண்டுகள் முன்னோக்கி சென்றோம்; ஆனால் திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில், 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டோம்.

50 ஆண்டு காலம் தீர்க்கமுடியாத காவிரி பிரச்னையை சட்ட போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பை பெற்ற கட்சி அதிமுக; தொண்டன் கூட அதிமுகவின் உச்சபட்ச அதிகாரத்துக்கு வரலாம்”“கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது திமுக அரசு”அதிமுகவை எந்தக் கொம்பனாலும் எதிர்க்க முடியாது.

நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்தி வருகிறது; உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் எனும் நாடகத்தை இன்று அரங்கேற்றி உள்ளார் கச்சத்தீவை மீட்போம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பச்சை பொய் பேசுகின்றார். கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. மத்திய அரசுடன் 13 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த போது கட்சியை மீட்போம் என திமுக கூறவில்லை.

ஆனால் தற்போது மீனவர்களின் வாக்கை பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பொய் பேசுகிறார். 2008இல் கச்சத்தீவை மிக்க நடவடிக்கை கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா. 2011இல் கச்சத்தீவை மீட்பு தீர்மானத்தை அதிமுக பேரவையில் நிறைவேற்றியது.