நாடு முழுவதும் இன்று 77 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா என்ற இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அந்த இயக்கத்தில் பங்கேற்கும் வகையில் பலரும் ட்விட்டர் X, போன்றவற்றின் முகப்பு படங்களை மூவர்ண கொடியாக மாற்றி வருகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த நாளில் கொடியோடு செல்ஃபி புகைப்படம் எடுத்து மக்கள் அனைவரும் harghartirange.com என்ற இணையதளத்தில் பதிவேற்றுமாறு மத்திய அரசு இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.