உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒருசில வீடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மிருகக்காட்சிசாலையில் சஃபாரி செய்யும் போது திடீரென பெரிய காட்டு விலங்குகளை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. சமீபத்தில், IFS அதிகாரி ரமேஷ் பாண்டே தனது ட்விட்டர் கணக்கில் இந்த  வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள தேசிய பூங்காவில் கனமழையின் போது புலி ஒன்று மழை தண்ணீர் குடித்து வருகிறது. சில இயற்கை ஆர்வலர்கள் சஃபாரி சென்றபோது இந்த காட்சியை கண்டதால் அவர்கள் உடனடியாக தங்கள் கேமராவை கொண்டு படம் பிடித்தனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.