
இந்தியாவில் போக்குவரத்து விதிகளின்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். மீறி அவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. ஆனால் வாகனம் ஓட்டுவதை கூட பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டு சிறுவர்கள் அதனை தாறுமாறாக சாலையில் ஓட்டுகின்றனர். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சின்ன பையன் அதுவும் பைக் உயரம் கூட இல்லாத பையன் பைக்கை ஸ்டார்ட் செய்து ஓடிச் சென்று பைக்கில் ஏறுகிறார். அவரால் நின்று கொண்டு ஏற முடியாது.
ஏனென்றால் கால்கள் எட்டாது என்பதால் பார்த்தாக யோசித்து பைக்கை இயக்குகின்றார். சைக்கிளை பெடலடித்து ஓட்டுவது போல பைக்கையும் அப்படி ஓட்டுகிறார். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் அந்த சின்ன பையன் மட்டும் பைக்கில் செல்லவில்லை. ஏற்கனவே மற்றொரு சின்ன பையனும் அந்த பைக்கில் அமர்ந்து கொண்டிருக்கிறார். பார்க்கும்போது இந்த வீடியோ காமெடியாக இருந்தாலும் விபத்து ஏற்பட்டால் அதன் விபரீதம் புரியும் என பலரும் கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க