இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. என் நிலையில் குறிப்பிட்ட காலத்தில் உங்களின் ஆதார் அட்டை எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிதாக கண்டறிய முடியும். ஆதாரை பிறர் ஏதேனும் செயல்களுக்கு பயன்படுத்தி இருந்தால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான http://UIDAI.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். ஒரு பகுதி திறக்கும். அதில் ஆதார் சர்வீசஸ் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் ‘ Authentication History’ என்ற பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களின் 12 இலக்க ஆதார் என்னை உள்ளிட வேண்டும். 16 இலக்க மெய்நிகர் ஐடி இருந்தால் அந்த ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு என்னை உள்ளிடவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு மொபைல் எண்ணில் otp என் வரும். அதை திறந்து இருக்கும் பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ளிட வேண்டும். அதற்கு முன்பு அதே பக்கத்தில் நீங்கள் மேலே உள்ள ‘ Authentication type’ என்ற பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளிடவும். பிறகு verify OTP என்பதை கிளிக் செய்தவுடன், ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அந்தப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதியும் இருக்கும். நீங்கள் விரும்பினால் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.