
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றில் பாலம் அமைத்து தர பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதனால் ஆற்றின் ஒருபுறம் இருக்கும் மக்கள் அவசர தேவைக்கு ஆற்றில் இறங்கி நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல ஆற்றில் கழுத்து வரை உள்ள தண்ணீரில் தனது உறவினர்களின் உதவியுடன் நடந்து செல்கிறார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதப்பதைக்க செய்துள்ளது. கடந்த வருடம் தாய் ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டயரில் படுக்க வைத்து ஆற்றில் இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்காரில் பாலம் கட்டி தராததால் ஆற்று வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண் நடந்து செல்லும் அவல நிலை…. pic.twitter.com/AFzSlJrgB2
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) July 26, 2023