கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகை உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுத் தொகுப்பை குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த வருடம் அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் தொகுப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதே சமயம் நிதி நிலையை சமாளிப்பதற்கு மாநிலத்திற்கு கடன் வழங்க வேண்டும் என்றும் வரி பங்கீடு அதிகரிக்க வேண்டும் எனவும் மாநில நிதி அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.