டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை மையமாகக் கொண்ட நினைவாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் மகிழ்ச்சி உத்சவ் என்ற நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத் திட்டம் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் ஜூலை 24 முதல் ஜூலை 29ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மகிழ்ச்சி பாடத் திட்டத்தின் பயன் சிறந்ததாக இருந்தது. குழந்தைகளின் படிப்பில் கடிசமான அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க அவர்களுக்கு உதவியதாக அரசு தெரிவித்துள்ளது. டெல்லி அரசு பள்ளிகளில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் உறவுகளின் முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது குறித்து அதிக அளவு கற்றுக் கொண்டனர். மிக முக்கியமாக இந்த குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொண்டனர் என அரசு தெரிவித்துள்ளது.