இன்ஸ்டாகிராமில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா பிரபல பாலிவுட் பாடலான ‘ஜப் கோய் பாத் பன் ஜயே’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் தவிர, புதிய புகைப்படங்கள் மற்றும் ரீல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெமிமா சிறப்பாக செயல்பட்டார்.

தொடரின் இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் 86 ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல்,பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஆட்டநாயகன் விருதை வென்றார். இதற்கிடையில், ஜெமிமா பாடிய ஒரு பாடலின் மூலம் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமில் பிரபல பாலிவுட் பாடலான ‘ஜப் கோய் பாத் பன் ஜயே’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

ஜெமிமா இந்த வீடியோவைப் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்களும் கருத்துகள் மூலம் அன்பைப் பொழிந்தனர். ஆல்-ரவுண்டர் ஹர்லீன் தியோல் தனது சக வீரரை ‘ஓய் ஹோய் தாகத் கேர்ள், நல்ல குரல்’ என்று பாராட்டினார்.

டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த நான்காவது வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அவர் 83 போட்டிகளில் 10 அரைசதங்களுடன் மொத்தம் 1751 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3152) முதலிடத்திலும், ஸ்மிருதி மந்தனா (2854), முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் (2364) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளனர்.

https://www.instagram.com/reel/CvFIyAfLvMQ/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==