இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது..

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷன் தாமஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் லெக் ஸ்பின்னர் யானிக் கரியா ஆகியோர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு பெற்றதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோதியும் காயத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். முன்னாள் கேப்டன்கள் பூரன், ஹோல்டருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குட்கேஷ் மோதி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்.

வெள்ளை பந்து  முகாமில் கூடுதல் வீரர்கள் :

டென்னிஸ் புல்லி, ரோஸ்டன் சேஸ், மெக்கென்னி கிளார்க், கவேம் ஹாட்ஜ், ஜெய்ர் மெக்கலிஸ்டர், ஓபேட் மெக்காய், கெவின் விக்காம்.

குறிப்பு :

கீமோ பால் காயமடைந்ததால் அணியில் இடம் கிடைக்கவில்லை. நிக்கோலஸ் பூரன் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் தேர்வுக்கு கிடைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் v இந்தியா டூர் ஒருநாள் போட்டி அட்டவணை :

ஜூலை 27: 1வது CG யுனைடெட் ODI, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்

ஜூலை 29: 2வது CG யுனைடெட் ODI, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ்

ஆகஸ்ட் 1: 3வது CG யுனைடெட் ODI, பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட்

ஆரம்ப நேரம் காலை 9:30 மணிக்கு (காலை 8:30 ஜமைக்கா) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.

சர்வதேச டி20 போட்டி :

ஆகஸ்ட் 3: 1வது T20I, பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட்

ஆகஸ்ட் 6: 2வது T20I, தேசிய மைதானம், கயானா

ஆகஸ்ட் 8: 3வது T20I, தேசிய ஸ்டேடியம் கயானா

ஆகஸ்ட் 12: 4வது T20I, ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், புளோரிடா

ஆகஸ்ட் 13: 5வது T20I, ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், லாடர்ஹில், புளோரிடா