இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும். ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடு முரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலை தெரிக்க ஓட வைத்து உயிர் பயத்தை காட்டும்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சேற்று நதியில் ஒரு யானையும் நபருடன் இருப்பதை காண முடிகிறது. அந்த நபர் ஆற்றின் நடுவில் நிற்கும் நிலையில் யானை தும்பிக்கையை நீட்டி அந்த நபரின் கையைப் பிடிக்கிறது. அப்படியே பிடித்துச் சென்று அந்த நபரை யானை கரைக்கு இழுத்துச் செல்கிறது. அந்த நபர் யானையை கட்டி அணைத்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.