மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அம்மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கிய 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த நிலச்சரிவு சம்பவத்தில் பல குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெற்றோரை இழந்த 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை ஸ்ரீகாந்த் ஷிண்டே அறக்கட்டளை கவனித்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.