ம.பிரதேசத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வினோத தண்டனையை அறிவித்துள்ளார் கிராம பஞ்சாயத்து நாட்டாமை. அதாவது மத்தியப் பிரதேச கிராமம் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து கால்நடைகள் சுற்றி திரிவதால்  பொறுமையிழந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒரு விநோத உத்தரவை அறிவித்தனர்.

அங்கு நாகநடுயி என்ற கிராமத்தில் கால்நடைகள் தெருவில் திரிந்தால் அதன் உரிமையாளருக்கு 5 செருப்படி மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாயத்து தண்டோரா போட்டு தெரிவித்துள்ளது. பஞ்சாயத்தின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.