அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. சுமார் 3 மணி நேர பரிசோதனைக்கு பின் அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அனுமதிக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
