இப்பொழுதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலேயே அதிகமான புத்தகம் ஒன்றை சுமந்து செல்கிறார்கள். இதனால் அவர்களுடைய மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023-24 கல்வி ஆண்டு முதல் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களை நான்கு பருவமாக பிரித்துள்ளது.

அதன்படி ஒரு பருவத்திற்கான பாடங்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் மொத்தமாக ஒரு புத்தகம் மற்றும் ஒரு நோட்டு புத்தகம் மட்டும் பள்ளிக்கு கொண்டு சென்றால் போதும். இதனால் மாணவர்களுடைய புத்தக சுமை குறைந்துவிட்டது. அம் மாநிலத்தில் புதிய கல்வி ஆண்டு வரும் ஜூன் 30-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.