சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் காந்திநகர் அருகே சென்றபோது பின்னால் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விக்ரமின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்