மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள தீவிர புயலான “பிபோர்ஜாய்” அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது. மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து ஜூன் 15-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா, கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. பிபோர்ஜாய் புயாலால் அரபிக் கடலில் ஆக்ரோஷமாக அலைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜாய் புயலை அமைதிப்படுத்த குஜராத் பாஜக எம்எல்ஏ ப்ரத்யுமான்சிங் ஜடேஜா கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்தார். இவர் பூஜை செய்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.