தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கோழிக் கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிலோ கோழிக் கறியின் விலை 300 முதல் 310க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் ஒரு கிலோ 270க்கும் கடந்த மாதம் 240க்கும் மட்டுமே விற்பனை ஆனது. இந்த வாரத்தோடு மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறுவதால் இனி கோழிக் கறியின் விலை சரியும் என்று எதிர்பார்க்கலாம்.
