சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த விடுதிகளில் சேரலாம்.

இங்கு உணவு மற்றும் தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். தகுதியுடைய மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் இடமிருந்து அல்லது மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்ற அதனை பூர்த்தி செய்து ஜூன் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை இணைக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது ஒப்படைத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.