1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
அதேபோல 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந் நிலையில் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் இன்னும் ஒரு வாரத்திற்கு சுட்டெரிக்க்கும்  வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறிய நிலையில்   இந்த அறிவிப்புவெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது..