தெலுங்கு திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வெண்ணிலா கிஷோர். இவர் தற்போது தன்னுடைய வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை மலை போல் குவித்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பிரபல நடிகர் விஷ்ணு மஞ்சு தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதோடு இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து அவர் என்ன செய்வார் என்று ஆச்சரியமாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெண்ணிலா கிஷோரை கலாய்க்கும் விதமாகவே இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளதாக கூறி வருகிறார்கள்.
Photo was taken when I visited Sri. @vennelakishore garu home. I wonder what he will do with these 2000₹ notes. 🤔 pic.twitter.com/bLApojXxyA
— Vishnu Manchu (@iVishnuManchu) May 20, 2023