
தமிழகத்தில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் 29-ஆம் தேதி முடிவடைகிறது. வெயிலின் தாக்கத்தினால் தற்போது மக்கள் பெரும் அவதி அடையும் நிலையில் சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் ஒரு குட் நியூஸ் சொல்லியுள்ளார்.
அதாவது நகரின் பல்வேறு பகுதிகளில் கடல் காற்று என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலையும் பல்வேறு இடங்களில் கடல் காற்று வீசிய நிலையில் இன்றும் கடல் காற்று வீசும் என கூறியுள்ளார். மேலும் சென்னை புறநகர் மற்றும் நகரின் மேற்கு பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும் எனவும் அங்கு கடல் காற்று செல்ல நேரம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.