
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டையில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மாற்றுதல் மற்றும் ஆதார் அட்டையை அப்டேட் செய்தல் குறித்து யுஐடிஏஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், முகவரி மற்றும் தொலைபேசி நம்பர் போன்றவற்றை மை ஆதார் இணையதளத்தில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
இதேப்போன்று உங்கள் குழந்தைகளுக்கு 15 வயது நிரம்பியிருந்தால் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோ மெட்ரிக் விவரங்களை மாற்றம் செய்ய வேண்டும். இதேபோன்று 10 வருடங்களுக்கு மேலாக ஆதார் அட்டையை புதுப்பிக்காதவர்கள் 2023 மார்ச் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டையை புதுப்பித்தல் மற்றும் அதில் உள்ள விவரங்களை மாற்றுதல் போன்றவைகளுக்கு ரூபாய் 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.