தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்ள காவல் துறை நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு (Anti Terrorism Squad) ஒன்று 383 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5751.61 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அவர், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்,சமூக வலைத்தளங்களில் சட்ட மற்றும் ஒழுங்கு குறித்து பரப்பப்படும் தகவல்களை உடனுக்குடன் திரட்டி மேல் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையின் நுண்ணறிவு பிரிவில் சமூக ஊடக பிரிவு உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.