
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் அஜித் பலருக்கும் மறைமுகமாக பல உதவிகளை செய்து வருபவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அந்த வகையில் விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்மணிக்கு நடிகர் அஜித் உதவிய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனியாக பயணம் செய்துள்ளார்.
லண்டன் ஹீத்ரா விமான நிலையத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண் அனைத்து பொருட்களையும் தூக்கி வருவதை நடிகர் அஜித் பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணிடம் சென்று எனக்கும் 2 குழந்தைகள் இருக்கிறது. உங்களுடைய உணர்வு எனக்கு புரியும் எனக் கூறி அந்த பெண்ணின் அனைத்து பொருட்களையும் நடிகர் அஜித் தூக்கி சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் நடிகர் அஜித்துக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு மற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fan about Ajith sir, today's pic.
Pic: Karthik | #Ak #Ajith #AjithKumar | #Thunivu | #AK62 | #RIDEformutualrespect | pic.twitter.com/EvBEVfxY0Z
— Ajith | Dark Devil (@ajithFC) April 14, 2023