மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்து இருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த பூங்குழலி எனும் கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.