
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பண பரிவர்த்தனைகள் எளிதாக மாறிவிட்டது. ஆனால் பலர் இன்னும் வீடுகளில் ரொக்கம் வைத்திருக்கும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். செலவுக்கு போக சேமிப்பு பணத்தையும் வீட்டில் ரொக்கமாக வைத்திருக்கிறார்கள். வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் வருமான வரித்துறை ரூல்ஸ் படி நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்ட வேண்டும்.
நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு இல்லை என்றால் கணக்கில் வராத பணத்திற்கு அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக 137 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு உங்களிடம் கணக்கு இருக்கிறது என்றால் நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஒருவேளை வைத்திருக்கும் பணத்திற்கு உரிய ஆதாரம் இல்லாவிட்டால் வருமானவரித்துறையினரால் அபராதம் விதிக்கப்படும்.